All Questions
Class 11 / Bio-Botany
Class 11 Bio-Botany Textbook Questions
All Questions (100)Practice textbook-based MCQs by topic.
Q1.Book Back Question
பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?
A
வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன
B
நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும்
C
DNA அல்லது RNA-வை கொண்டுள்ளன
D
ஆற்றல் வெளிப்படுத்தும் தொகுப்பு நொதிகள் உள்ளன
Q2.Book Back Question
கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
A
டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை
B
செல்சுவரில் அதிகளவு பெப்டிடோகிளைக்கான் உள்ளது
C
செல்சுவர் ஓரடுக்கால் ஆனது
D
அடர் ஊதா நிறத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன
Q3.Textbook Content
1935-ஆம் ஆண்டு நோயுற்ற புகையிலைச் சாற்றிலிருந்து வைரஸ்களை முதன்முதலில் படிகப்படுத்திய விஞ்ஞானி யார்?
A
டிமிட்ரி ஐவான்ஸ்கி
B
M.W. பெய்ஜிரிங்ச்
C
W.M. ஸ்டான்லி
D
எட்வர்ட் ஜென்னர்
Q4.Textbook Content
புகையிலையில் தொற்றுதல் ஏற்படுத்தும் காரணியை "தொற்றுத் தன்மை வாய்ந்த உயிருள்ள திரவம்" (Contagium vivum fluidum) என்று அழைத்தவர் யார்?
A
M.W. பெய்ஜிரிங்ச்
B
அடால்ப் மேயர்
C
ராபர்ட் கேலோ
D
லெடர்பர்க்
Q5.Textbook Content
புரத உறையற்ற, வட்டவடிவமான குறைந்த மூலக்கூறு எடை கொண்ட ஓரிழை RNA அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
விரியான்
B
விராய்டுகள் (Viroids)
C
பிரியான்கள்
D
விருசாய்டுகள்
Showing questions 1–5 of 100