Science Questions
Practice Science questions with detailed answers and explanations. Improve your score with our comprehensive question bank.
1,201Questions
Browse Questions
Page 10 of 61
Q181.Concept
நவீன ஆவர்த்தன அட்டவணையில் 18-வது தொகுதித் தனிமங்கள் எவை?
A
மந்த வாயுக்கள் / அரிய வாயுக்கள் (Noble gases)
B
கார உலோகங்கள்
C
ஹேலஜன்கள்
D
உலோகப்போலிகள்
Q182.Concept
நவீன ஆவர்த்தன அட்டவணையில் 17-வது தொகுதித் தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
ஹேலஜன்கள் (Halogens / உப்புக்கிகள்)
B
மந்த வாயுக்கள்
C
சால்கோஜன்கள்
D
உள் இடைநிலைத் தனிமங்கள்
Q183.Concept
நவீன ஆவர்த்தன அட்டவணையின் இரண்டாம் தொகுதித் தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
கார மண் உலோகங்கள் (Alkaline earth metals)
B
கார உலோகங்கள்
C
ஹேலஜன்கள்
D
இடைநிலைத் தனிமங்கள்
Q184.Concept
நவீன ஆவர்த்தன அட்டவணையின் முதல் தொகுதித் தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
கார உலோகங்கள் (Alkali metals)
B
கார மண் உலோகங்கள்
C
ஹேலஜன்கள்
D
மந்த வாயுக்கள்
Q185.Concept
நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள செங்குத்துத் தூண்கள் (தொகுதிகள்) எத்தனை?
A
18 தொகுதிகள்
B
7 தொகுதிகள்
C
8 தொகுதிகள்
D
10 தொகுதிகள்
Q186.Concept
நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள கிடைமட்ட வரிசைகள் (தொடர்கள்) எத்தனை?
A
7 தொடர்கள்
B
18 தொடர்கள்
C
8 தொடர்கள்
D
16 தொடர்கள்
Q187.Law
நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களின் பண்புகள் எவற்றின் ஆவர்த்தனச் செயல் ஆகும்?
A
அணு எண்கள் (Atomic numbers)
B
அணு நிறைகள்
C
நியூட்ரான் எண்ணிக்கை
D
நிறை எண்கள்
Q188.Law
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தனச் செயல் ஆகும் என்று கூறியவர்
A
டிமிட்ரி மெண்டலீவ்
B
ஹென்றி மோஸ்லே
C
டொபரீனர்
D
நியூலேண்ட்ஸ்
Q189.History
தனிமங்களை அவற்றின் அணுநிறை ஏறுவரிசையில் அடுக்கும்போது எட்டாவது தனிமம் முதல் தனிமத்தின் பண்புகளைப் பெறும் என்று கூறியவர்
A
ஜான் நியூலேண்ட்ஸ்
B
டொபரீனர்
C
மெண்டலீவ்
D
மோஸ்லே
Q190.History
தனிமங்களை மும்மைகளாக (Triads) வகைப்படுத்திய ஜெர்மன் விஞ்ஞானி யார்?
A
ஜான் வுல்ப்காங் டொபரீனர்
B
ஜான் நியூலேண்ட்ஸ்
C
டிமிட்ரி மெண்டலீவ்
D
ஹென்றி மோஸ்லே
Q191.Application
புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
A
கோபால்ட்-60 ()
B
சோடியம்-24
C
பாஸ்பரஸ்-32
D
யுரேனியம்-235
Q192.Application
புதைபடிவங்கள் மற்றும் மரங்களின் வயதைக் கண்டறியப் பயன்படும் கார்பனின் ஐசோடோப்பு
A
கார்பன்-14 ()
B
கார்பன்-12
C
கோபால்ட்-60
D
அயோடின்-131
Q193.Concept
வெளிக்கூட்டில் 8 எலக்ட்ரான்களைப் பெற்று (ஹீலியம் தவிர) வினைபுரியாத தன்மை கொண்ட தனிமங்கள்
A
மந்த வாயுக்கள் / பூஜ்ஜியத் தொகுதி தனிமங்கள்
B
கார உலோகங்கள்
C
ஹேலஜன்கள்
D
உலோகங்கள்
Q194.Definition
ஒரு அணுவின் வெளிக்கூட்டில் (Valence shell) உள்ள எலக்ட்ரான்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
இணைதிறன் எலக்ட்ரான்கள் (Valence electrons)
B
உட்பகுதி எலக்ட்ரான்கள்
C
சுற்றுப்பாதை எலக்ட்ரான்கள்
D
அணுக்கரு எலக்ட்ரான்கள்
Q195.Concept
போர் அணு மாதிரிப்படி எலக்ட்ரானின் கோண உந்தம் () எதற்குச் சமம்?
A
இன் முழு எண் மடங்காக
B
C
D
Q196.History
நிலையான வட்டப் பாதைகளில் (சுற்றுப்பாதைகளில்) எலக்ட்ரான்கள் சுற்றுவதாகக் கூறியவர் யார்?
A
நீல்ஸ் போர்
B
ரூதர்பீேர்டு
C
தாம்சன்
D
சாட்விக்
Q197.Definition
புரோட்டான்களும் நியூட்ரான்களும் கூட்டாக எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
நியூக்ளியான்கள் (Nucleons)
B
எலக்ட்ரான்கள்
C
அயனிகள்
D
போட்டான்கள்
Q198.Definition
ஒரு அணுவின் நிறை எண் (Mass number - A) என்பது எவற்றின் கூடுதல்?
A
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்
B
எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள்
C
எலக்ட்ரான்கள் மட்டும்
D
நியூட்ரான்கள் மட்டும்
Q199.Definition
ஒரு தனிமத்தின் அணு எண் (Atomic number - Z) என்பது எதைைக் குறிக்கிறது?
A
புரோட்டான்களின் எண்ணிக்கை (அல்லது எலக்ட்ரான்கள்)
B
நியூட்ரான்களின் எண்ணிக்கை
C
நிறை எண்
D
அணுக்கருவின் நிறை
Q200.Concept
ஓர் புரோட்டானின் நிறை மதிப்பு தோராயமாக எவ்வளவு?
A
கி.கி
B
கி.கி
C
கி.கி
D
1 கி.கி
More Practice